காக்கைச் சிறகினிலே...!

Saturday, September 24, 2011

      என்ன பார்க்க கவிதை தனமான தலைப்பா இருக்கே ஒருவேளை இது கவிதையா இருக்குமோன்னு நினச்சிகிட்ட Click பண்ணிட்டீங்களா...

 I'am Really Sorry..!

தலைப்பு மட்டும் கவிதைத்தனமா இருக்கும் மத்தப்படி தலைப்புக்கும் இந்த போஸ்டுக்கும் சம்பந்தமில்லை.. சும்மா enjOy பண்ணி பாருங்க.,




















































என்ன பாத்தாச்சா.,
WoW!!!!!  சொல்லணும் போல இருக்கா ...

அப்புறம் ஒரு விசயம் இங்குள்ள இறகெல்லாம் எந்த பறவையோடனு தெரியலே ஆனா கண்டிப்பா காக்கை சிறகு இல்ல., ஹி..ஹி..

Art of needle.....

Tuesday, September 13, 2011





























கவிதையில் ஒரு கதை!


சூரியனுக்கும் தாகமெடுக்கும் நண்பகல் கோடை
கானல் நீரும் கரைந்துப்போகும் கடுமையான சூடு...
எங்கு நோக்கினும்.,
வெப்பக்காற்றின் வேதனையான வருடல்...
எச்சில்- விலை என்ன என்றுக்கேட்க தோன்றும் நாவறட்சி

புழுதிப்படிந்த பெருந்திறலில்
திசைமாறிய தசை உருவம்
உயிரற்ற காற்றின் உஷ்ணம் தாங்காமல் மேலெழும்பி
மயங்கிவிழும் மஞ்சள் நிற மணல் நிறைந்த பாலை தேசத்தின் நடுவே

கண்களுக்குள் விரல் புதைத்து வாழ்வின் வழி செல்ல
மெல்ல மெல்ல தள்ளாடி வந்தது....
அயர்ந்த அவ்வேளையிலும்
வறண்ட வாய் தேசம் புக துளி தண்ணீரை தேடி
சுடுமணலில் சுருங்கி நின்றது

சுழற்றி அடிக்கும் சூறாவளின் சுவாலைகளில்
சுழலாமல் கருக்கும் அனலின் சுவாசங்களில் சிக்குண்டும்
ஒற்றை உயிர் இனியும் உலவ வேண்டும் என்ற எண்ணத்தில்
கண்ணின் வழி
காட்சிகளை
பற்றி பிடிக்க...

சற்றே தூரத்தில் அசாதரணமாய் ஏதோ தென்பட
அங்கேணும் தண்ணீர்
கிடைக்குமா
என சந்தேகத்தில் கண்கள் கண்ணீர் கொண்டது
கிடைக்கும் இந்த தேசத்தில்...
கால்கள் நம்பிக்கை கொண்டது.



கால் வாசி உயிரும்
முக்கால் வாசி உணர்வும் அற்ற நிலையில்
அவ்விடம் நோக்கி தேகம் மையல் கொண்டன
தண்ணீரின் தடயங்கள் இருப்பதை பார்த்து
தாகத்தின் சுவடுகள் சாந்தம் கொண்டன...

ஆயிரம் வால்ட் மின்சாரத்தை
அதிவேகமாக மின்மினி பூச்சிகளில் புகுத்திய
புத்துணர்ச்சி...
காரணம் கண்ட காட்சி
அகல விழி திறந்து
ஆராவாரம் அற்ற அப்பகுதியில்
அறிவார்ந்து
அதை நோக்கிய போது

கரைப்படிந்த பாத்திரம் - எனினும்
அதனுள்ளே கால்வாசி தண்ணீர்..!

அதிர்ச்சி விழிகளில் ஆசை தீ பரவ
எடுத்து பருகும் எண்ணத்தில்
பாத்திரம் நோக்கி தம் கரம் நீட்ட
பாத்திரம் தொடும் முன் ஒரு பத்திரம்
கண் பட்டது

ஆம்! அங்கே ஒரு பலகை
பலவகை வார்த்தைகளுடன்.,
நேற்றி சுருக்கி எழுத்தை ஆராய்ந்தான்...


                                                                  அறிவிப்பு
====================================================================
  இந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணிரை அருகே இருக்கும் குழாயில் ஊற்றி
பம்பில் அடித்தால் தண்ணீர் வரும்- 
குடித்து முடித்தப்பின் அந்த பாத்திரத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பி இங்கு வைத்து விடவும.
=====================================================================

" வார்த்தைகள் படித்ததும் வரையறையற்ற குழப்பம்.."

அருகே...
ஆயிரம் வருடங்களுக்கும் மேலான
அரதபுரதான...
ஆழ்துளை ஆயுத குழாய் - தண்ணீர்
வருவதற்கான அடையாளங்களை முற்றிலும் தொலைத்த
அறிகுறீகளுடன் அயர்ந்து நின்றது.


வார்த்தை பிழையென்றால்

தண்ணீரும் வீண்
தம் உயிரும் வீண்

செய்முறை பயிற்சிப்படி செயல்பட மனம் மறுத்தது


 சுயநல சுருக்கு
சிந்தையை இறுக்கி கட்டியது
சூன்யமாய் விளக்கி...
கொண்ட தாகத்தை பெரிதாய் காட்டியது
முடிவில் முரண்பாட்டு அறிவு சொன்னதை
முழுதாய் ஏற்றது

பருகலாம் என்று பத்திரமாய் எடுத்த
பாத்திரம் வாய்வரை செல்ல
உதட்டின் ஓரத்தில் ஒருதுளி விழ
சுளிரென்று சுட்டது சுய சிந்தனை

எழுதிய வார்த்தைகள் உண்மையென்றால்...

அறிவற்று அனேக மக்களுக்கு
அநீதி விளைவித்தவன் போலாவேனே...?

இன்றைய என் சுய நலத்திற்காக
இந் நீர்அருந்தினால்
இவ்விடம் நோக்கும்
நாளைய மனிதர்களின் நல்வாழ்வை பூஜ்யமாக்கல்
சரியா...?

பராவயில்லை.,
இருக்கும் தண்ணிரை குழாயில் ஊற்றுவோம்
எழுதியது பொய்யென்றால்
பயனற்று போவது நம்வாழ்வு மட்டும்
உண்மையென்றால்
பயனடையபோவது
இனிவரும் எல்லோரும் தான்

முடிவாய் குழாயில் நீர் ஊற்ற
முடிவு செய்தான்.

ஊற்றினான்
ஒன்றும் ஆகவில்லை -எனினும்
உயிர் இன்னும் போகவில்லை... எண்ணிணான்
சில நிசப்தங்களுடன் கணங்கள் தொடர்ந்தன

ஆச்சரியம்!
மெல்ல தலைக்காட்டிய  தண்ணீர்
புவியில் கால்ப்பதித்த மகிழ்ச்சியில்
குழாயின் வாய் பிளந்து
தம் வருகையே
அதிகரித்தது...

வாயில் நுழைந்த நீர் அவனது
வாழ்வையை ஈரமாக்கியது
புத்துணர்ச்சி...
அப்பாலையில் புதிதாய் பூத்தது
மனமகிச்சி பொங்க.. அள்ளி பருகிய
நீர்
தாகத்தை தகர்த்தது...
பெருகிய வெள்ளத்தில் அவனது
சுயநல அழுக்கு அடித்துப்போனது...

நிரம்ப குடித்த மகிழ்ச்சியில்
கடவுளுக்கு நன்றி உதிர்த்துவிட்டு
பவ்யமாய் பழைய பாத்திரத்தில்
புதுநீர் புகுத்தி
நலமுடன் வைத்து

வெற்றி புன்னகையோடு
வடக்கோ தெற்கோ.. ஏதும் அறியாமல்
வாழ்வியல் திசை நோக்கி புறப்பட்டான்...
அந்த பொதுநல விரும்பி..!



 இந்த நீதிக்கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்., எனினும் கவிதை வடிவில் எழுதலாம் என முயற்சித்தேன்...

     நாம் எல்லோர் வாழ்க்கையிலும் இக்கட்டான சில தருணங்கள் வரத்தான் செய்கிறது. சுய நல மனிதர்கள் கிடைக்கும் வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்... ஆனால் அத்தருண சுய நலங்கள் பலரது வாழ்வியலை அழித்து விடுகிறது., ஆக நமக்கு எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் பொது நல விரும்பியாக இருக்கவேண்டும் அல்லது இறக்கவேண்டும் என்பதே இக்கதை சொல்லும் நீதி!!!

என்னமா திங் பண்றாங்க...!@#?

Sunday, September 11, 2011

  •       எந்த ஒரு உற்பத்தி பொருளும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் சென்றடைய அதற்கு மார்க்கெட்டீங் (சந்தையிடுதல்) முக்கியம். 
  • ஒவ்வொரு வாடிக்கையாளாரும் உற்பத்தியாகும் பொருளை கண்டறிய அதற்கு அட்வர்டைசீங் (விளம்பரம்) மிக முக்கியம். 

        ஆக, அம்மிக்குழவி முதல் ஆகாயவிமானம் வரை எல்லோருக்கும் எல்லாவற்றையும் அறிவிக்க விளம்பரம் தான் மிகப்பெரிய காரணி.
கீழே பாருங்க... நம்ம ஆளுங்க என்னமா தீங் பண்ணி விளம்பரம் கொடுங்கிறாங்கன்னு., ! 























































தேடுபொருள் இரகசியங்கள்..!


      இணையத்தின் ‘டாப் ஒன்’ தேடுதல் பொறியாக கொண்டாடப்படுவது, ‘கூகுள்’தான். கூகுள் என்ற சொல், கூகோல் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. "1 என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்கள்" என்பதுதான் இந்தச் சொல்லுக்கு அர்த்தம். ஏராளமான வலைப்பக்கங்களை கூகுள் தேடித் தரும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

    தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் தேடும் வசதியை கூகுள் அளித்துள்ளது. ஆங்கிலத்தைப் போலவே, சொற்களை டைப் செய்யும்போதே, அது தொடர்பான பல சொற்களை வரிசையாகக் காட்டும் வசதிகளை தமிழ் தேடலிலும் பெறலாம்.

    பல வேலைக்களுக்கு நடுவே., நமது நினைவில் இல்லாத ஆனால் அவசியமான ஒரு தகவலை பெற நமக்கு சில வழிமுறைகளை வழங்கியுள்ளது . அதாவது தேடுபொறிகளில் நாம் தேடும் சொற்களுடன் சில குறியீடுகளைச் சேர்த்துத் தேடினால், நமக்கு வேண்டிய தகவல்களை துல்லியமாகப் பெறமுடியும்.



       ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொடுத்து தேடும்போது, ப்ளஸ் (+) குறியீட்டை சொற்களுக்கு இடையில் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக, சென்னை, ரியல்எஸ்டேட் பிஸினஸ் (Chennai realestate business) என்று தேட விரும்பினால்,

  • சென்னை + ரியல் எஸ்டேட் + பிஸினஸ் (Chennai + real estate + business) என்று தேடினால், இந்தச் சொற்கள் தொடர்பான பக்கங்கள் மட்டும் தோன்றும்.


   பிரபலமான ஒரு சொல்லைத் தேடும்போது, அந்தச் சொல் தொடர்பான பிரபல நபர்கள், இடங்கள் வரவேண்டாம் என்று நினைத்தால், மைனஸ் (-) குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

  • உதாரணமாக, ஆக்ரா என்ற சொல்லைத் தேட வேண்டும்… ஆனால், தேடலின் முடிவில் தாஜ்மஹால் தொடர்பான வலைப்பக்கங்களும் வந்து நிற்கக் கூடாது என்றால், ஆக்ரா – தாஜ்மஹால் (Agra - Taj Maha) என்று தேடுங்கள்.


    நாம் அளிக்கும் சொல்லை மட்டும்தான் துல்லியமாகத் தேட வேண்டும், இணைப்புகள் எதுவும் வேண்டாம் என்று நினைத்தால், மேற்கோள் குறிக்குள் அந்த சொல்லை அளியுங்கள்.

  • உதாரணமாக, "அண்ணா பல்கலைக்கழகம்" ("Anna University") இப்படி கொடுக்க வேண்டும்



    குறிப்பிட்ட ஒரு சொல்லைக் கொடுத்து அதை மட்டும் தேடாமல், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடித் தரச்சொல்லுமாறு ஸ்சர்ச் இன்ஜின்களுக்கு உத்தரவு போடலாம். அதற்கு இந்த " ~ "  குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.

  • உதாரணமாக, "அவள் விகடன் ~ விமன் வெல்ஃபேர்" (“Aval vikatan ~ Women Welfare”).


    ஒரு சொல்லுக்கு உடனடியாக அர்த்தம் தெரிய வேண்டும் என்றால், அகராதிகளைத் தேட வேண்டியதில்லை. எளிதாக, ”டிஃபைன்: (”define:”) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.

  • உதாரணமாக, டிஃபைன்: பெலிசியேஷன் (“define: felicitation”).




நன்றி:- அ.வி 
கிடைத்த டீட்டெய்ல அப்படி தாங்க இருக்கு



உங்களுக்கு யூஸ்ஃபூலா இருந்தா.. மேலும் தொடரும்.


படம் பார்த்து கவிதை சொல்..! -(1)

Saturday, September 10, 2011






அப்பாவின் வாசனை
பெரும் பாலான 
பிள்ளைகளுக்கு
வளைகுடா 
பொம்மையிலே...












சொல்லும் 
எல்லாவற்றிற்கும்
தலையசைக்காதே
அதற்கு நீ தேவையில்லை 
என் நிழலே போதும்

படம் பார்த்து கவிதை சொல்..!





அன்னை அடிப்பாளென்று
தெரிந்தும்
அதிகமாகவே 
நனைய சொல்கிறது
அதிகாலை மழை...






உன்னோடு பேசுகையில்
இருக்கும் சந்தோசத்தை விட
என்னோடு பேச மறுக்கையில்
ஏற்படும் வருத்தமே
அதிகம்
ஏனடி...

காரணம் மட்டும் தெரிந்திருந்தால்
எப்போதே விலகியிருப்பேன் 
உன்னை விட்டு...


SIX DIMENSION PICTURES

       
 
 வெனிசூலா நாட்டின் தலை நகரான கராகஸ் (Caracas) மாநிலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு இறுதியில் "உயிர்ஓவியம்" எனும் தலைப்பின் கீழ் சுமார் 20 நாடுகளை சேர்ந்த பிரபல ஓவியர்கள் பங்குபெற்ற ஓவியப்போட்டியில் முதல் ஆறு இடத்தை பிடித்த மிக நேர்த்தியான படங்கள் தான் நீங்கள் கீழே பார்க்க போவது ....



 






  •                                                                           















































     


    அப்படீனுல்லாம் சொல்ல மாட்டேன்., இதெல்லாம் எனக்கு மெயிலில் வந்த போட்டோஸ்...


  பார்த்தேன் வியந்தேன்... உங்களுக்காக இங்கே பகிர்ந்தேன்..



உயிரின் நிழல்...

Friday, September 9, 2011
உயிரும் உருகும் என்று
உணர்ந்தேன் உன்னால்
இன்று....


நான்..தேடாமல் கிடைத்தாலோ
என்னவோ....
நீ..தேடிய போது(ம்) 
நான் உன்னை விட்டு தூரமானேன்....


தேவையற்ற நேரத்தில் கூட
தேவையானவை உணர்ந்து
தெளிவாய் தந்தவளே...


இல்லாமை வாசலில்
இயலாமை பூட்டிட்டு
நீ உறங்கிய போதும்
உள் வந்து
கல்லாமை போக்கியவளே


சோற்றில் உப்பு அதிகம் என 
அங்கலாய்த்த போது....உன் 
வேர்வைத்துளிகளை 
வேகமாக துடைத்தாய்...
அன்று உணரவில்லை...
என் உணவின் சுவை
உன் உணர்வுகள் என்று





இரண்டும் இரண்டும் ஐந்தென்றேன்...
அறியாமலே...
தெரிந்தும் உண்மை என்றாய்...
நிலா சுடும் என்றேன்.. என் போலி பொது அறிவுக்கண்டு
உளம் பூரித்தாய்....


இடையில் மறைத்த
இறுதி ரொட்டித்துண்டும்
எனக்காகதான் என்று 
உணராமலே உண்டுக்கொண்டிருந்தேனே....
நான் நானாக ஆவதற்கு
நீ நாராக ஆனாயே...


என்னவெல்லாமோ...
சாப்பிட தந்தாயே...
என்ன சாப்பிட்டாய் என நான் கேட்கின்ற போது
எண்ணற்றவைகள் என சொன்னாயே- 
எதுவும் இல்லையே நான் யோசிக்க மறந்த போது
என் எண்ணங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தாயே...


எனக்காக நிஜமாய்
வாழ்ந்த உனக்காக
நிழலாக கூட 
வாழமுடியவில்லையெனும் போது...


விதைக்கும் நிழலுண்டு..
வந்தமரும் வழிப்போக்கனுக்கு 
எவ்வாறு தெரியாதோ...
அதுப்போல...யாரும் அறிவதில்லை 
உன் உயிரின் நிழலை...


மொத்த நேரமும் உன் கணவருக்காக -எஞ்சிய
மற்ற நேரம் உன் பிள்ளைக்காக
எப்போதடி வாழ்ந்தாய்...
நீ 
உனக்காக...?


தூர தேசத்திலும் பொருள் சேர்க்கும் கவனத்தில்...
நெற்றிச்சுருக்கத்தில் 
எனக்கான
உன் வாழ்வு சுருங்கி போனதை..
இறுதிவரை
நானறியேனடி....