இணையத்தின் ‘டாப் ஒன்’ தேடுதல் பொறியாக கொண்டாடப்படுவது, ‘கூகுள்’தான். கூகுள் என்ற சொல், கூகோல் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. "1 என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்கள்" என்பதுதான் இந்தச் சொல்லுக்கு அர்த்தம். ஏராளமான வலைப்பக்கங்களை கூகுள் தேடித் தரும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் தேடும் வசதியை கூகுள் அளித்துள்ளது. ஆங்கிலத்தைப் போலவே, சொற்களை டைப் செய்யும்போதே, அது தொடர்பான பல சொற்களை வரிசையாகக் காட்டும் வசதிகளை தமிழ் தேடலிலும் பெறலாம்.
பல வேலைக்களுக்கு நடுவே., நமது நினைவில் இல்லாத ஆனால் அவசியமான ஒரு தகவலை பெற நமக்கு சில வழிமுறைகளை வழங்கியுள்ளது . அதாவது தேடுபொறிகளில் நாம் தேடும் சொற்களுடன் சில குறியீடுகளைச் சேர்த்துத் தேடினால், நமக்கு வேண்டிய தகவல்களை துல்லியமாகப் பெறமுடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொடுத்து தேடும்போது, ப்ளஸ் (+) குறியீட்டை சொற்களுக்கு இடையில் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக, சென்னை, ரியல்எஸ்டேட் பிஸினஸ் (Chennai realestate business) என்று தேட விரும்பினால்,
- சென்னை + ரியல் எஸ்டேட் + பிஸினஸ் (Chennai + real estate + business) என்று தேடினால், இந்தச் சொற்கள் தொடர்பான பக்கங்கள் மட்டும் தோன்றும்.
பிரபலமான ஒரு சொல்லைத் தேடும்போது, அந்தச் சொல் தொடர்பான பிரபல நபர்கள், இடங்கள் வரவேண்டாம் என்று நினைத்தால், மைனஸ் (-) குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
- உதாரணமாக, ஆக்ரா என்ற சொல்லைத் தேட வேண்டும்… ஆனால், தேடலின் முடிவில் தாஜ்மஹால் தொடர்பான வலைப்பக்கங்களும் வந்து நிற்கக் கூடாது என்றால், ஆக்ரா – தாஜ்மஹால் (Agra - Taj Maha) என்று தேடுங்கள்.
நாம் அளிக்கும் சொல்லை மட்டும்தான் துல்லியமாகத் தேட வேண்டும், இணைப்புகள் எதுவும் வேண்டாம் என்று நினைத்தால், மேற்கோள் குறிக்குள் அந்த சொல்லை அளியுங்கள்.
- உதாரணமாக, "அண்ணா பல்கலைக்கழகம்" ("Anna University") இப்படி கொடுக்க வேண்டும்
குறிப்பிட்ட ஒரு சொல்லைக் கொடுத்து அதை மட்டும் தேடாமல், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடித் தரச்சொல்லுமாறு ஸ்சர்ச் இன்ஜின்களுக்கு உத்தரவு போடலாம். அதற்கு இந்த " ~ " குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.
- உதாரணமாக, "அவள் விகடன் ~ விமன் வெல்ஃபேர்" (“Aval vikatan ~ Women Welfare”).
ஒரு சொல்லுக்கு உடனடியாக அர்த்தம் தெரிய வேண்டும் என்றால், அகராதிகளைத் தேட வேண்டியதில்லை. எளிதாக, ”டிஃபைன்: (”define:”) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
- உதாரணமாக, டிஃபைன்: பெலிசியேஷன் (“define: felicitation”).
நன்றி:- அ.வி
கிடைத்த டீட்டெய்ல அப்படி தாங்க இருக்கு
உங்களுக்கு யூஸ்ஃபூலா இருந்தா.. மேலும் தொடரும்.
2 comments:
//இணையத்தில் என் எண்ணங்கள் போடும் கையழுத்து..!//
இப்படி சொல்லிட்டு, அடுத்தவங்க கையெழுத்தை போட்டிருக்கீங்களே!
:) :) :)
இப்படில்லாம் கேட்க க்கூடாது., என் கையெழுத்த மட்டும் போட்டா., என்ன தவிர யாரும் இங்கே வர மாட்டாங்க
அதற்காக தான் (இதை போஸ்ட் பண்ணும் போது தான் இப்படி ஒரு விசயம் இருக்கிறதே எனக்கு தெரியும்)
Post a Comment