படம் பார்த்து கவிதை சொல்..!

Saturday, September 10, 2011




அன்னை அடிப்பாளென்று
தெரிந்தும்
அதிகமாகவே 
நனைய சொல்கிறது
அதிகாலை மழை...






உன்னோடு பேசுகையில்
இருக்கும் சந்தோசத்தை விட
என்னோடு பேச மறுக்கையில்
ஏற்படும் வருத்தமே
அதிகம்
ஏனடி...

காரணம் மட்டும் தெரிந்திருந்தால்
எப்போதே விலகியிருப்பேன் 
உன்னை விட்டு...


1 comments:

Sabitha said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

\\அதிகமாகவே
நனைய சொல்கிறது
அதிகாலை மழை//

உண்மை தான் சிறு வயது நினைவு வருகிறது..


\\காரணம் மட்டும் தெரிந்திருந்தால்
எப்போதோ விலகியிருப்பேன்
உன்னை விட்டு//

அழகான விடை தெரியா வரிகள்..

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

Post a Comment