உயிரின் நிழல்...

Friday, September 9, 2011
உயிரும் உருகும் என்று
உணர்ந்தேன் உன்னால்
இன்று....


நான்..தேடாமல் கிடைத்தாலோ
என்னவோ....
நீ..தேடிய போது(ம்) 
நான் உன்னை விட்டு தூரமானேன்....


தேவையற்ற நேரத்தில் கூட
தேவையானவை உணர்ந்து
தெளிவாய் தந்தவளே...


இல்லாமை வாசலில்
இயலாமை பூட்டிட்டு
நீ உறங்கிய போதும்
உள் வந்து
கல்லாமை போக்கியவளே


சோற்றில் உப்பு அதிகம் என 
அங்கலாய்த்த போது....உன் 
வேர்வைத்துளிகளை 
வேகமாக துடைத்தாய்...
அன்று உணரவில்லை...
என் உணவின் சுவை
உன் உணர்வுகள் என்று





இரண்டும் இரண்டும் ஐந்தென்றேன்...
அறியாமலே...
தெரிந்தும் உண்மை என்றாய்...
நிலா சுடும் என்றேன்.. என் போலி பொது அறிவுக்கண்டு
உளம் பூரித்தாய்....


இடையில் மறைத்த
இறுதி ரொட்டித்துண்டும்
எனக்காகதான் என்று 
உணராமலே உண்டுக்கொண்டிருந்தேனே....
நான் நானாக ஆவதற்கு
நீ நாராக ஆனாயே...


என்னவெல்லாமோ...
சாப்பிட தந்தாயே...
என்ன சாப்பிட்டாய் என நான் கேட்கின்ற போது
எண்ணற்றவைகள் என சொன்னாயே- 
எதுவும் இல்லையே நான் யோசிக்க மறந்த போது
என் எண்ணங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தாயே...


எனக்காக நிஜமாய்
வாழ்ந்த உனக்காக
நிழலாக கூட 
வாழமுடியவில்லையெனும் போது...


விதைக்கும் நிழலுண்டு..
வந்தமரும் வழிப்போக்கனுக்கு 
எவ்வாறு தெரியாதோ...
அதுப்போல...யாரும் அறிவதில்லை 
உன் உயிரின் நிழலை...


மொத்த நேரமும் உன் கணவருக்காக -எஞ்சிய
மற்ற நேரம் உன் பிள்ளைக்காக
எப்போதடி வாழ்ந்தாய்...
நீ 
உனக்காக...?


தூர தேசத்திலும் பொருள் சேர்க்கும் கவனத்தில்...
நெற்றிச்சுருக்கத்தில் 
எனக்கான
உன் வாழ்வு சுருங்கி போனதை..
இறுதிவரை
நானறியேனடி....

2 comments:

ஏம்.ஷமீனா said...

Assalaamu alaikkum bai,
romba alaga sollirkeenga, masha'allah !!!
nalla thaan kaviathai eluthureenga !!!
keep it up ;)


your sister,
M.Shameena

G u l a m said...

wa alaikum salam warh
thanks sister

Post a Comment