இதனால் சகலமானவர்களுக்கும்.,

Friday, May 20, 2011


     இருக்கிற வேலையில நெட்ல Browsing பண்றதுக்கு டைம் கிடைக்கிறதே பெரிய விசயம்., அதிலும் அந்த டைம்ல இந்த சைட் வந்தது அதைவிட பெரிய விசயம். உங்க மன தைரியத்தை பாராட்டி அதுக்கு முதலில் உங்களுக்கு ஒரு பெரிய Thanks., , (வேண்டா வெறுப்பா வந்தவங்களுக்கு ஒரு சின்ன Thanks)., 


   நூறு கோடி பேருக்கு மேல இருக்கிற இந்த உலகிலே ஒரு நுறு பேராவது பார்ப்பாங்கனு நெனச்சித்தான் இந்த ப்ளாக் தொடக்கம். பின்னே., Freeனா விட்டுடுவோமா என்ன..! 

சரி விசயத்திற்கு வரேன்., 


எதுக்கு இந்த ப்ளாக்.,?
     ஏதோ வேகத்திலே இந்த ப்ளாக்கை ஆரம்பிச்சிடேன்., இனிமே தான் யோசிக்கணும் என்ன செய்யலாமுனு., பயப்படாதீங்க., 
எனக்கு அரசியல் புடிக்காது., ஏன்னா...? அரசியல் தெரியாது., (இப்படி சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடணும்)
இங்கு விமர்சனம் இருக்கும் விரசம் இருக்காது, காமெடி இருக்கும், காம'நெடி' இருக்காது, கவிதை இருக்கும் (சரி...சரி கவிதை மாதிரி இருக்கும்) காமம் இருக்காது, தனியா மனம் விட்டு படிக்கலாம், தனி மனித சாடல் இருக்காது, என் எண்ணங்களுக்கு எழுத்துரு கொடுத்து உலவவிடும் எண்ணத்தில் இத்தள தொடக்கம்

  மொத்தத்திலே, சொல்லணும்னா..பரவாயில்ல சில்லரையா கூட சொல்லாம், நீங்க எதிர்பார்க்கிறது ஒருவேளை இருக்கலாம் ஆனா நீங்க எதிர்ப்பார்க்காதது கண்டிப்பா இருக்காது., 


 தமிழ் எழுத்து...?
  தமிழ் எழுத்தல தலைப்பை தேடிதேடி கீ போர்டில் சில எழுத்துக்கள் தேஞ்சி போனது தான் மிச்சம் ஒண்ணும் சரியா படல., கிடைச்ச ஒண்ணு இரண்டு தலைப்பும் Available இல்லே., பின்னே என்ன செய்யுறது தமிழ் எழுத்துல ஏதும் தலைப்பு கிடைக்காதால தலைப்பே தமிழ் எழுத்துனு வச்சீட்டேன் (இதுக்கு ஏதும் வரி விலக்கு கிடைக்குமானு யாராவது கேட்டு சொல்லுங்க)

   கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தான் இணையத்தில் இணையும் வாய்ப்பு., அதிலும் கவிதை எழுதணும்னா மூடு வேற வரனும்., வரும் - வரலாம்...

  உங்க பேவரிட் பக்கத்தில் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு என் தமிழ் எழுத்துகளுக்கு இருக்கிறதோ இல்லையோ - 
   ஓரளவுக்கு சுமாரா ... இருந்தும் வெரி நைஸ் என போலி புன்னகையோடு தேனீர் கோப்பையே உறீஞ்சிக்கொண்டே மானிட்டரின் மத்தியில் முகம் புதைத்து உலகவலையில் உலாவரும் ஓய்வு நேரத்தில் ஒருமுறையேணும் உங்கள் கண்களை காணும் வாய்ப்பு இந்த தமிழ் எழுத்துக்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் இனி... 




   பிறரை நேசிக்காத மனிதரிடமிருந்தும், 
பிறரால் நேசிக்கப்படாத மனிதரிடமிருந்தும் எந்த பயனும் இல்லை.


ஆகையால் நேசிக்க பழகுங்கள்., -இல்லையேல்
நேசிப்பவர்களிடம் பழகுங்கள்..
. . . 

4 comments:

Admin said...

வெரி நைஸ்

G u l a m said...

தமிழ் எழுத்தில் -முதல் கமெண்டே ANGLILATHIL !
சபாஷ்., நன்றி சகோ

Peer Mohamed said...

போலி புன்னகையோடு வெரி நைஸ்

Syed said...

Browsing,Thanks, Free இதெல்லாம் தமிழ் எழுத்தா... யாரும் சொல்லவே இல்லை :)

நீங்க எதை போட்டாலும் படிக்க நாங்க இருக்கோம்ல, நீங்க கலக்குங்க சகோ :)

Post a Comment